News June 10, 2024
மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற அமைச்சர்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில், முகையூர் ஊராட்சி ஒன்றியம், சென்னகுணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2024 -2025ஆம் ஆண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து , மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். பின்னர் விலையில்லா பாடப்புத்தகங்களை இன்று வழங்கி விழாப் பேரூரையாற்றினார்.
Similar News
News July 7, 2025
புலி நடமாட்டம்; கூண்டு வைத்துள்ள வனத்துறையினர்

திண்டிவனம் வட்டம், ரெட்டணை அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டுக்குட்டிகளைத் தாக்கிய மர்ம விலங்கு சிறுத்தை புலி என நேற்று (ஜூலை 6) உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்டணை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இதேபோல தாக்குதல்கள் நடந்துள்ளதால், வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை புலியை பிடிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மக்களே கொஞ்சம் உஷாரா இருங்க!
News July 7, 2025
விழுப்புரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஒரத்துார் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (28) சிந்தாமணியை சேர்ந்த மோனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துவேல் குடித்துவிட்டு வருவதால் மனைவியிடையே தகராறு ஏற்படும். இதற்கிடையே நேற்று மீண்டும் முத்துவேல் குடித்துவிட்டு வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், விழுப்புரம் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வண்டி எண்கள் 06109 (விழுப்புரம்-ராமேஸ்வரம்) மற்றும் 06110 (ராமேஸ்வரம்-விழுப்புரம்) ஆகிய ரயில்கள் இரு மார்க்கங்களிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து இயக்கப்படும். இந்த நீட்டிப்பு பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.