News June 10, 2024

தர்மபுரி:அரசு கல்லூரியில் சேர்க்கை கலந்தாய்வு

image

தர்மபுரி அரசு கலை கல்லூரி 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்பிற்கான முதலாம் கட்ட கலந்தாய்வு (10/06/24), (11/06/2024), (12/06/2024) ஆகிய தேதிகளில் கல்லூரி கலையரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 15, 2025

தருமபுரி: இலவசமா காசிக்கு போக செம்ம வாய்ப்பு!

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <>இணையதளத்திலோ <<>>பெற்று அக்டோபர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News September 15, 2025

ஒகேனக்கலில் தடை நீக்கம்

image

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 16,000 கன அடியாகக் குறைந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

News September 15, 2025

தருமபுரி: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)

error: Content is protected !!