News June 10, 2024

கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

image

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்யாணமகாதேவி ஊராட்சி அணைக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கினார் இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்

Similar News

News August 25, 2025

திருவாரூர்: கிராம உதவியாளர் பணி-கடைசி வாய்ப்பு

image

திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <>இந்த லிங்கிள்<<>> விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நாளைக்குள் (26.08.2025) வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

திருவாரூர்: ரேஷன் கடை பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News August 25, 2025

திருவாரூர்: ஆற்று சுழலில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

image

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடியைச் சேர்ந்தவர் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்த கல்லூரி மாணவர் குகன்(18). இவர், நேற்று முன்தினம் மாலை குகன், சேகரை அருகே உள்ள வெண்ணாற்றுத் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்று சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை அடுத்து, சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தேடியதில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!