News June 10, 2024
இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டு – விமர்சனம்

மதுரை ஆதினம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடி நேற்றைய தினம் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அதற்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள். சீமானும் அண்ணாமலையும் அதிகமான ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழக மக்களிடம் ஒரே ஒரு குறை தான், இலங்கைத் தமிழர்களை கொன்றவர்களுக்கு ( திமுக, காங்கிரஸ் கூட்டணி) ஓட்டு போட்டுள்ளனர்” என்றார்.
Similar News
News September 10, 2025
மதுரை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா சிந்தனை அரங்கம்

மதுரை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா 2025 சிறப்பாக நடைபெறுகிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுகக் கலையரங்கம், மதுரையில் சிந்தனை அரங்கம் நடைபெறும். இதில் “எட்டு வழிசாலை” நூலாசிரியர் முத்தையா மரபின் மைந்தன் தலைப்பு உரையாற்றுகிறார். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற தலைப்பில் தமிழ் இளவர் மதுரை வி. ராமகிருஷ்ணன் பேசுகிறார். அனைவரும் வருகை தந்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் அழைக்கிறது.
News September 10, 2025
மதுரை: சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாநகர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இவரது இரண்டாவது மகன் பாண்டீஸ்வரன்(16), பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுவன் பாண்டீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட போலீசார் அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News September 10, 2025
மதுரை: மேலூர், திருமங்கலம் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

மதுரை மேலூர், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கு செப்டம்பர் 18ம் தேதி வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலூரில் 85 ஆயிரம் ஏக்கருக்குதினமும் 900 கன அடியும், திருமங்கலத்தில் 19,500 ஏக்கருக்கு 230 கன அடி வீதம் மொத்தம் 1130 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். *ஷேர் பண்ணுங்க