News June 10, 2024
தடகளத்தில் தங்கம் வென்ற சஞ்ஜிவானி ஜாதவ்

சர்வதேச தடகள போட்டியில், இந்திய வீராங்கனை சஞ்ஜிவானி ஜாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் போர்ட்லாண்டில் நடந்த மகளிருக்கான 10,000 மீ., ஓட்டத்தின் தனி நபர் பிரிவில் கலந்துகொண்ட சஞ்ஜிவானி, பந்தய தூரத்தை 32 நிமிடம் 22.77 வினாடிகளில் கடந்து, முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 2ஆவது இடம் பிடித்திருந்தார்.
Similar News
News September 3, 2025
இளையராஜா விழாவில் விஜய், அஜித்?

செப்.13-ல் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இந்நிகழ்வில் ரஜினி, கமல், மற்ற திரையுலக ஜாம்பவான்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டில் இருக்கும் CM ஸ்டாலின், தமிழகம் திரும்பிய பிறகு இவ்விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதற்கு திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விஜய், அஜித் பங்கேற்பார்களா?
News September 3, 2025
கில்லை வைத்து BCCI போடும் ப்ளான் : உத்தப்பா

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர்களை தவிர்த்துவிட்டு சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்ததற்கு பின்னால் பக்கா பிஸ்னஸ் உள்ளதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், சச்சின், தோனி, கோலி, ரோஹித் வரிசையில் கில்லை, இந்திய அணியின் பிராண்டாக BCCI மாற்றவுள்ளது என்றார்.
News September 3, 2025
பாஜகவுடன் கூட்டணி ஏன்? EPS விளக்கம்

திமுக கூட்டணி கட்சிகளே ஜாக்கிரதை, ஸ்டாலின் உங்களை விழுங்கிவிடுவார் என EPS விமர்சித்துள்ளார். திமுக அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், பொதுக்கூட்டங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கும் போது அதிமுகவிற்கு பிரகாசமான ஒளி இருப்பது தெரிவதாகவும் கூறியுள்ளார்.