News June 10, 2024
குரூப் 4 தேர்வு 9376 பேர் ஆப்சென்ட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப் – 4 தேர்வு நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம், 41,219 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, பர்கூர், ஓசூர், போச்சம்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை வட்டங்களில் 131 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இதில்31473 பேர் மட்டுமே தேர்வெழுதினர் 9376 தேர்வு எழுத வரவில்லை.
Similar News
News April 30, 2025
கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்தில் பெண் பலி

சூளகிரி பகுதியில், நேற்று (ஏப்ரல்.29) இரவு 9 மணி அளவில் சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற இரண்டு சக்கர வாகனம் மீது மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் உத்தனப்பள்ளி பகுதியில் 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
News April 30, 2025
அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று(ஏப்.30) கிருஷ்ணகிரியில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்று அன்னையின் அருளை பெற்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். செல்வ வளமும், எல்லா வளமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்-29) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.