News June 10, 2024
திருவள்ளூர்: தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகன்

திருத்தணி அடுத்த இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர் அசின் மும்தாஜ். இவரது மகன் பாஷா தனது தாயிடம், வியாபாரம் செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது; தனக்கு கடன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மும்தாஜ் தன்னால் கடன் வாங்கி தர முடியாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த பாஷா நேற்று உருட்டு கட்டையால் மும்தாஜ் தலையில் தாக்கினார். தலையில் பலத்த காயமடைந்த மும்தாஜ் மயங்கி விழுந்தார். பாஷாவை போலீசார் தேடிவருகின்றனர்.
Similar News
News July 8, 2025
ஹவுஸ் ஓனருடன் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000412 (வாடகை அதிகாரி) புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி <
News July 8, 2025
வாடகை வீட்டில் இருப்போருக்கான உரிமைகள்

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்
News July 8, 2025
உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் இந்த <