News June 10, 2024

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் உதயமாா்த்தாண்டம் சாமிக்கால்விளையைச் சோ்ந்தவர் ரமேஷ்குமாா் (40). கட்டடத் தொழிலாளியான இவா் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராஜாபுதுக்குடி பெட்ரோல் நிலையம் அருகே பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

Similar News

News September 15, 2025

தூத்துக்குடியில் குழந்தை திருமணம்

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இடையே குழந்தை திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த திருமண குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

News September 15, 2025

தூத்துக்குடி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

தூத்துக்குடி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து தூத்துக்குடி மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

தூத்துக்குடி: நடத்துனர், ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் ஒருவரை தனியார் பேருந்தில் ஏறக்கூடாது என கூறி நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் தற்போது தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் கண்டக்டர், டிரைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.ஷேர்!

error: Content is protected !!