News June 10, 2024
வந்தவாசி அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகாபாரத அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நேற்று நடைபெற்றது. இதில்மண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவ பொம்மையின் தொடை பகுதியை பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா் கதாயுதத்தால் தாக்கி பிளக்கும் காட்சி நடித்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News July 6, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News July 5, 2025
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த தி.மலை மாணவி

தி.மலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள உடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கவிதா, இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் இணையும் முதல் பழங்குடியின மாணவி என்ற சாதனையை பெற்று அசத்தியுள்ளார். அரசு பள்ளியில் படித்த இவர் 12ஆம் வகுப்பில் 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஆசிரியர்களின் உதவியுடன், உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமும் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். ஷேர் பண்ணுங்க.
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <