News June 10, 2024

உடல் நல குறைவால் கடலூா் சிறை கைதி உயிரிழப்பு

image

பழனிஅரசமரத்து தெருவை சேர்ந்த முத்துசாமி கொலை வழக்கில் இவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவா் கடந்த 2013ஆம் ஆண்டு கடலூா் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா். முத்துசாமிக்கு வெள்ளிக்கிழமை இரவு மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக தெரிகிறது.இதனால் கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார்.
அங்கு அவா் உயிரிழந்தார்.

Similar News

News September 15, 2025

திண்டுக்கல்: குடும்பப் பிரச்னையால் தூக்கிட்டு தற்கொலை

image

திண்டுக்கல்: பழனி இடும்பன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதுரைவீரன் (45). தொழிலாளியான இவர், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(செப்.14) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடிவாரம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 15, 2025

திண்டுக்கல்: ரயில்வே துறையில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதி கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

திண்டுக்கல்லில் பயங்கர விபத்து!

image

திண்டுக்கல்: மலேசிய வாழ் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று(செப்.14) பழனி தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு கொடைக்கானல் நோக்கி சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பேத்துப்பாறை அருகே வெள்ளைப்பாறை பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாடை இழந்த வேன், இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

error: Content is protected !!