News June 10, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூன் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News November 11, 2025
தந்தை-மகன் விரிசலில் இருந்து பாமக கடந்துவிட்டது

தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்ட விரிசலில் இருந்து பாமக கடந்துவிட்டதாக ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார். அன்புமணியின் போட்டி நடவடிக்கைகளுக்கு பிறகு, மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்தப்பட்டதாக கூறிய அவர், அவரால் எங்களுக்கும் கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மாம்பழ சின்னத்தை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
News November 11, 2025
மழைக்காலத்தில் இந்த கசாயம் அவசியம்!

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ★தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ★செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News November 11, 2025
தேர்தல் கூட்டணி.. விஜய் புதிய முடிவெடுத்தார்

2026 தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், சாதக பாதகங்களை ஆராயச் சிறப்பு சர்வே ஒன்றை நடத்த விஜய் முடிவெடுத்துள்ளார். இதில், தவெக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்த்தால் பலம், அதேநேரம் நாம்(தவெக) யாருடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பன உள்ளிட்ட பல கேள்விகள் இடம்பெற உள்ளதாம். இந்த ரிசல்ட் வந்த உடன் விஜய் அடுத்தகட்ட முடிவெடுக்க உள்ளார்.


