News June 9, 2024

ஆம்பூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

திருத்தணியில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு சொந்த ஊரான ஒசூருக்கு இன்று வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் திருப்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Similar News

News August 25, 2025

திருப்பத்தூர்: பாலாற்றில் சாமி சிலைகள் கண்டெடுப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் உள்ள பாலாற்றங்கரையில் இருந்து நேற்று (24.08.2025) சாமி சிலைகளை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி வருவாய்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்துறையினர் பாலாற்றில் இருந்து 8 வெவ்வேறு விதமாக 4 அடி கொண்ட பழங்கால சிலைகளை கைப்பற்றினர்.

News August 25, 2025

வாணியம்பாடி அருகே பனை மரத்தில் மோதி விபத்து!

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனம்குப்பம் அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மூன்று இளைஞர்கள் சாலையில் இருந்த பனை மரத்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதை கண்ட பகுதி மக்கள் உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் வரவைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 25, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையத்தில் வங்கி தளங்களை பயன்படுத்திய பிறகு முறையாக Log Out செய்வது நன்று. பொதுமக்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!