News June 9, 2024
கர்நாடகாவுக்கு 4 அமைச்சர் பதவி

மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் அமைச்சராக பதவியேற்க உள்ளனர். பாஜகவை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஷோபா, பிரகலாத ஜோஷி, ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்கள். தமிழகத்தில் எல்.முருகன், உ.பி 9, ஆந்திரா 3, பிஹார் 8, மராட்டியம் 3 பேர் என அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அண்ணாமலை அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Similar News
News September 2, 2025
₹47 லட்சம் வருமானம்: ஆனாலும் மாசம் ₹30,000 புருஷன் தரணும்!

ஜீவனாம்சம் பெறவே பெண்கள் விவாகரத்து பெறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இத்தகவல் மேலும் அதிரவைக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் ₹47 லட்சம் வருமானம் ஈட்டிய பெண் ஒருவர், மெட்ராஸ் ஐகோர்ட்டில் தனது மகனை வளர்க்க கணவரிடம் இருந்து மாதம் ₹30,000 வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கையை மறுத்த ஐகோர்ட், விவாகரத்தை உறுதி செய்துள்ளது. இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News September 2, 2025
BREAKING: தமிழகத்தில் மாஸ்க் அவசியம்.. அரசு அறிவிப்பு

TN-ல் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
News September 2, 2025
வாக்கு திருடர் சர்ச்சை: BJP Vs CONG

பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேராவிற்கு டெல்லியில் 2 EPIC நம்பர் இருப்பதாக போட்டோ வெளியிட்டு பாஜக விமர்சித்துள்ளது. ஆனால், தனது பெயரை நீக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், இன்னும் ஏன் பெயர் இருக்கிறது என்பதை ECI விளக்க வேண்டும் என்றும் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.