News June 9, 2024
வரத்து அதிகரிப்பால் தர்பூசணி விலை குறைவு

கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்புகளை தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது தர்பூசணி. இதனால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை ஈடு செய்வதற்காக அதிக அளவில் மக்கள் வாங்கி சென்றனர். கடந்த காலங்களில் 1 கிலோ தர்பூசணி பழம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து 1 கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Similar News
News April 21, 2025
தஞ்சை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶ வட்டாட்சியர், தஞ்சாவூர் – 04362-230456, ▶ வட்டாட்சியர், ஒரத்தநாடு – 04372-233225, ▶ வட்டாட்சியர், கும்பகோணம் – 0435-2430227, ▶ வட்டாட்சியர், பட்டுக்கோட்டை – 04373-235049, ▶ வட்டாட்சியர், பேராவூரணி – 04373-232456, ▶ வட்டாட்சியர், பாபநாசம் – 04374-222456 ஷேர் பண்ணுங்க.
News April 21, 2025
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) இங்கு <
News April 21, 2025
லாரி மோதியதில் இளைஞர் பரிதாப பலி

திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் சுதாகர் (25). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்தார். மனக்கரம்பை முதன்மைச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதில் ஆல்வின் பலத்த காயமடைந்தார். உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.