News June 9, 2024
மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி

திண்டிவனம் அடுத்த வடஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் விஜயரங்கன்(27). புதிய வீட்டின் பாத்ரூமில் ஒயரிங் வேலை நடந்து வந்தது. நேற்று (ஜூன் 8) விஜயரங்கன் ஸ்விட்ச் போர்டில் இணைக்கப்பட்டிருந்த டிரில்லிங் மிஷினில் இருந்த மின்சார ஒயரை கையில் சுற்றிய போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
புலி நடமாட்டம்; கூண்டு வைத்துள்ள வனத்துறையினர்

திண்டிவனம் வட்டம், ரெட்டணை அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டுக்குட்டிகளைத் தாக்கிய மர்ம விலங்கு சிறுத்தை புலி என நேற்று (ஜூலை 6) உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்டணை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இதேபோல தாக்குதல்கள் நடந்துள்ளதால், வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை புலியை பிடிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மக்களே கொஞ்சம் உஷாரா இருங்க!
News July 7, 2025
விழுப்புரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஒரத்துார் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (28) சிந்தாமணியை சேர்ந்த மோனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துவேல் குடித்துவிட்டு வருவதால் மனைவியிடையே தகராறு ஏற்படும். இதற்கிடையே நேற்று மீண்டும் முத்துவேல் குடித்துவிட்டு வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், விழுப்புரம் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூலை 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வண்டி எண்கள் 06109 (விழுப்புரம்-ராமேஸ்வரம்) மற்றும் 06110 (ராமேஸ்வரம்-விழுப்புரம்) ஆகிய ரயில்கள் இரு மார்க்கங்களிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து இயக்கப்படும். இந்த நீட்டிப்பு பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.