News June 9, 2024
ஆம்பூர்: ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

ஆம்பூர் அடுத்த வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 25 வயது தக்க இளைஞர் நேற்று இரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News September 15, 2025
திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் இவரது மகன் நந்தகுமார் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று (செ.14) நந்தகுமார் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News September 14, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செ.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News September 14, 2025
திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு இன்று (14-09-2025) தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் இளைஞர்கள், மாவட்ட மக்கள் ஆன்லைனில் போலியான பல கடன் செயலிகள் (Loan App) உள்ளதால் அதிலிருந்து பணம் பெறுவதை தவிர்க்கவும், மோசடி ஆப்களில் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. ஷேர் பண்ணுங்க