News June 9, 2024
மத்திய அமைச்சர்களாக 30 பேர் பதவியேற்க வாய்ப்பு

பிரதமர் மோடி தொடர்ந்து 3ஆவது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் சேர்ந்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஜேடியு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழா 8 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் வரை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News September 8, 2025
இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் அவதரித்த நாள்

Under 19 WC-ல் துணை கேப்டனாக கோப்பையை தூக்கிய சுப்மன் கில்லுக்கு, அதில் இருந்து ஏறு முகம்தான். சில விமர்சனங்கள் இருந்தாலும், இப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்த்து நிற்கிறார். ‘The flat track bully’ என விமர்சிக்கப்பட்ட கில், இங்கிலாந்தில் தன் பேட்டால் பதிலடி கொடுத்தார். பேட்ஸ்மேனாக தடம் பதித்த கில் விரைவில் கேப்டனாகவும் சாதிப்பார் என நம்பலாம். பிரின்ஸ் கில்லுக்கு HBD வாழ்த்துகள்.
News September 8, 2025
‘செல்லம்மா.. செல்லம்மா’

பிரியங்கா மோகனின் சமீபத்திய போட்டோக்கள் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது. கோல்டன் ஸ்பேரோ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இளைஞர்களின் நெஞ்சில் அம்புவிட்ட பிரியங்கா மோகன், தற்போது பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது போட்டோஸை பார்த்து, ‘வெள்ளை உடையில் பிரியங்கா மோகன், ஜீன்ஸ் அழகால் மயக்கும் புகழ்மோகன், சிரிப்பால் உலகம் கலக்கும் போகன்’ என நெட்டிசன்கள் கவிதை பாட தொடங்கிவிட்டனர்.
News September 8, 2025
BIG BREAKING: முடிவை மாற்றிய செங்கோட்டையன்

மன நிம்மதிக்காக ஹரித்துவார் கோயிலுக்கு செல்வதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்வதற்கு முன்பு, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுச்செயலாளர் எடுத்த முடிவு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். நேற்று வரை ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என கூறி வந்த செங்கோட்டையன், அந்த முடிவை மாற்றி கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?