News June 8, 2024
கங்கனாவை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கங்கனாவை அறைந்த அந்த காவலருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
Similar News
News November 11, 2025
நாட்டை உலுக்கிய கார் வெடிப்பு: தலைவர்கள் இரங்கல்

டெல்லியில் ஹூண்டாய் கார் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டெல்லி சம்பவம் மனதை உலுக்கியதோடு, மிகுந்த வேதனை அளிப்பதாக ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார். இதேபோல், நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், EPS உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News November 11, 2025
முதுகுவலியை தவிர்க்க… இதை செய்யுங்க!

இன்று முதுகுவலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட பயணம், கனமான பையை சுமப்பது உள்ளிட்டவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, 30 mins-க்கு ஒருமுறை, உட்கார்ந்த இடத்திலிருந்தே முடிந்தவரை திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடைபயிற்சி போன்றவற்றை செய்யலாம். தரையில் பாயில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.
News November 11, 2025
ராசி பலன்கள் (11.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


