News June 8, 2024

மதுரையில் தளபதி விலையில்லா விருந்தகம்

image

மதுரை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தினமும் 100 ஏழைகளுக்கு காலை உணவு வழங்கும் ” விலையில்லா விருந்தகம் ” திறப்பு விழா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் நாளை மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. தளபதி விலையில்லா விருந்தகத்தை  கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையேற்று திறந்து வைக்கிறார்.

Similar News

News September 10, 2025

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

image

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்களை இன்று (செப்.10) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்த அமைச்சரிடம் பொதுமக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

News September 10, 2025

மதுரை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்களை நாளை (செப்.11) அடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 10, 2025

மதுரை: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரையில் நடைபெறுகிறது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!