News June 8, 2024

துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு

image

பொதுமக்கள் முதலீடு செய்வதில் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில், பொதுமக்களிடம் மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரங்களை காவல்துறை பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகின்றனர். இதில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்த வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும் என பொதுமக்களுக்கு கூறப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

image

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் (7373004537) அல்லது உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16974223>>தொடர்ச்சி<<>>

News July 7, 2025

ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் (2/2)

image

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று,ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் கொடுக்க வேண்டும். உடனே காப்பீடு அட்டை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

புலி நடமாட்டம்; கூண்டு வைத்துள்ள வனத்துறையினர்

image

திண்டிவனம் வட்டம், ரெட்டணை அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டுக்குட்டிகளைத் தாக்கிய மர்ம விலங்கு சிறுத்தை புலி என நேற்று (ஜூலை 6) உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்டணை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இதேபோல தாக்குதல்கள் நடந்துள்ளதால், வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை புலியை பிடிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மக்களே கொஞ்சம் உஷாரா இருங்க!

error: Content is protected !!