News June 8, 2024
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல்!

ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பொதுச் சின்னத்தை ஒதுக்கக் கோரும் விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் வரவேற்பதாகக் கூறினார். கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு, ஜம்மு & காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 24, 2025
BREAKING: உளுந்து, பச்சை பயிறு ஆதரவு விலை உயர்வு

உளுந்து, பச்சை பயிறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சைப் பயறு ₹87.68, ஒரு குவிண்டால் ₹8,768 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உளுந்து ஒரு கிலோ ₹78, ஒரு குவிண்டால் ₹7,800 என குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பல லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.
News September 24, 2025
உலகளவில் தமிழ்நாட்டு கடல் உணவுக்கு கிடைத்த பெருமை

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 100 கடல் உணவுகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த உணவு இடம்பிடித்துள்ளது. மேலும், இந்தியாவைச் சேர்ந்த 3 கடல் உணவுகள், 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து டாப் 100 பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அவை என்ன? எந்த இடம்? என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க ருசித்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 24, 2025
கலைமாமணி விருதின் பரிசுத்தொகை, சலுகைகள்

தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருது பெறுவோருக்கு 3 சவரன் தங்கப் பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்படும். பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரசுவதி ஆகியோரது பெயரில் அகில இந்திய விருது பெறுபவர்களுக்கு ₹1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யலாம்.