News June 8, 2024

மதுராந்தகம்: சார் பதிவாளர் வீட்டில் சோதனை

image

மதுராந்தகம் சார்பதிவாளராக (பொறுப்பு) திலீப்குமார் (40) என்பவர் உள்ளார். கடந்த 6ம் தேதி செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி ரூ1, 50, 000 பணத்தை கைப்பற்றி திலீப்குமார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை கடலூர் பீச் ரோட்டில் உள்ள திலீப்குமார் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

Similar News

News September 14, 2025

செங்கல்பட்டு மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News September 14, 2025

செங்கல்பட்டு: வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம்

image

மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பறவைகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் பறவைகள் இங்கு வரத் துவங்கும். ஆனால் தற்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், 100க்கும் குறைவான பறவைகளே உள்ளன. ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளதால், பறவைகள் வரத்து குறைந்திருக்கலாம் என, பறவைகள் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

News September 14, 2025

செங்கல்பட்டு: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

image

செங்கல்பட்டு மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!