News June 8, 2024
வயநாடா? ரேபரேலியா? ராகுலுக்கு புது நெருக்கடி

மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் வெற்றி பெற்றுள்ளார். இதுபோல், 2 தொகுதிகளில் வெல்லும் ஒருவர், 14 நாளில் ஏதேனும் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல், 2 தொகுதிகளையும் இழக்க நேரிடும். அதன்படி, ஏதேனும் ஒரு தொகுதியை 14 நாளில் ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது. இதில், என்ன முடிவை அவர் எடுக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.
Similar News
News September 24, 2025
கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கம்

சென்னை- நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு, இன்று முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதனால், இருக்கைகளின் எண்ணிக்கை 1,128இல் இருந்து 1,440 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8 பெட்டிகளுடன் தொடங்கிய இந்தச் சேவை, 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது பயணிகளின் வசதிக்காக 20 பெட்டிகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
News September 24, 2025
மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

தரகர்கள் எல்லாம் தலைவர்களாகி விட்டதால் நாட்டில் இஷ்டத்திற்கு வரி விதிக்கப்படுவதாக சீமான் சாடியுள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களின் சுமை குறையும் என்கிறார்கள். ஆனால் தொடக்கத்தில் இந்த வரியை விதித்தது யார்? ஜிஎஸ்டி வரி மக்களுக்கு சுமையாக இருந்ததை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியென்றால் மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
News September 24, 2025
டிரம்ப்பின் அறிவிப்பை ஆதரிக்கும் USA நிறுவனங்கள்

H-1B விசா கட்டண உயர்வு குடியேற்றத்தை நெறிப்படுத்துவதற்கான முயற்சி என Nvidia, OpenAI நிறுவனங்கள் ஆதரித்துள்ளன. அதேசமயம், தேசத்தின் வளர்ச்சிக்கு திறன்மிக்க ஊழியர்களின் குடியேற்றம் அவசியம் எனவும், இத்தகைய குடியேற்றத்தால் தான் USA-ன் அடித்தளம் போடப்பட்டுள்ளதாகவும் Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். அதேபோல், திறமை மிகு ஊழியர்களை தக்கவைப்பது அவசியம் என OpenAI CEO சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.