News June 8, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் 300 மி. மீ மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 7.3 செ.மீ மழை திருவள்ளூரில் 3.5 செ.மீ மழை ஊத்துக்கோட்டை 4.2 செ.மீ, தாமரைப்பாக்கம் 1.8 செ.மீ, ஆர்கே பேட்டை 2.2 செ.மீ, செங்குன்றம் 1 செ.மீ, பொன்னேரி 1.4 செ.மீ பள்ளிப்பட்டு 1 செ.மீ, சோழவரம் 2.1செ.மீ, கும்முடிபூண்டி 2செ.மீ, ஆவடி 5மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Similar News
News August 24, 2025
விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டறங்கில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, மின் துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகளின் குறைகளை மனுவாக நேரடியாக தெரிவித்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 24, 2025
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாயை சேர்ந்த 80 வயது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்த வட மாநில வாலிபர்கள் மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயன்றனர். இந்த நிலையில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் வரும் சத்தத்தை கேட்டு வட மாநில வாலிபர்கள் தப்பி ஓடியுள்ளார்.
News August 23, 2025
திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.