News June 8, 2024
சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பகுதியில் ரகசியத் தகவலின்பேரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் அவர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படை வீரர்களும் 3 பேர் காயமடைந்தனர்.
Similar News
News August 10, 2025
தங்கமா அல்லது நிலமா? எதில் முதலீடு செய்யலாம்?

பங்குச்சந்தையின் கிங் என அழைக்கப்படும் வாரன் பஃபெட், தங்கத்தை மதிப்புமிக்கதாக கருதவில்லை. அவரிடம் ₹12 லட்சம் கோடி சொத்துக்கள் இருந்தும், தங்கத்தில் ஒரு பைசா கூட முதலீடு செய்யவில்லை. தங்கமா (அ) நிலமா? என கேட்டால், நிலத்தையே மதிப்புமிக்கதாக கருதுகிறார். தங்கத்தை விட நிலத்தில் முதலீடு, தொழில் செய்வதுதான் பெஸ்ட் என கூறுகிறார். இதன்மூலம், நீண்ட காலத்திற்கு நிலையான பலன்கள் கிடைக்கும் என நம்புகிறார்.
News August 10, 2025
ரயில்வே பண்டிகை கால ஆஃபர்

பண்டிகை காலங்களில் டிக்கெட் புக் செய்யும் போது, ரிட்டன் டிக்கெட்டையும் சேர்த்து புக் செய்தால் கட்டணத்தில் 20% தள்ளுபடி செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 13 முதல் 26-ம் தேதி வரை சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டும். அதன்போதே, நவ., 17 முதல் டிச., 1-ம் தேதி வரையில் ரிட்டன் டிக்கெட்டுக்கான புக்கிங் செய்ய வேண்டும். இதற்கான புக்கிங் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
News August 10, 2025
அமைதி பேச்சுவார்த்தையை வரவேற்ற இந்தியா

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்றுள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அமைதி நிலைநாட்டும் என நம்புவதாக ‘இது போர்களின் காலம் அல்ல’ என்ற பிரதமர் மோடியின் மேற்கோளை சுட்டிக்காட்டி இந்தியா தெரிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் வைத்து டிரம்ப் -புடின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.