News June 8, 2024

கங்கனாவை கன்னத்தில் அறைந்தது சரியா?

image

சண்டிகர் ஏர்போர்ட்டில் நடிகை கங்கனாவை, பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக பிறரை தாக்குவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல, காவலர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாகப் பேசுபவர்களை தாக்கினால் நாட்டின் பாதுகாப்பு என்னவாகும் என்ற வாதத்தையும் சிலர் முன்வைத்து வருகின்றனர்.

Similar News

News December 7, 2025

திருமணம் எப்போது? மனம் திறந்த சிம்பு

image

திருமண விஷயத்தில், ரொம்பவும் அடிவாங்கிவிட்டதாக சிம்பு கூறியுள்ளார். எப்போது திருமணம் செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் நாம் தனியாக இருக்கிறோமா அல்லது யாருடனாவது இருக்கிறோமா. அது முக்கியமல்ல என்றும் ஒழுக்கமாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறோமா என்பதே முக்கியம் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும், தன் வாழ்க்கையில் அது நடக்கும்போது (திருமணம்) தானாக நடக்கும் என்று அவர் பேசியுள்ளார்.

News December 7, 2025

இந்தியாவுக்கு எதிராக ரெக்கார்டு படைத்த டி காக்

image

இந்தியாவுக்கு எதிரான 3-வது ODI-ல் சதம் அடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார். அவர் IND-வுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். கில்கிறிஸ்ட் Vs SL மற்றும் சங்கக்காரா Vs IND, தலா 6 சதங்கள் விளாசியிருந்தனர். மேலும், ODI-ல் அதிக சதம் அடித்த WK பட்டியலில் சங்கக்காராவுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் தலா 23 சதமடித்துள்ளனர்.

News December 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 542
▶குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
▶பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

error: Content is protected !!