News June 8, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூன் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News August 9, 2025
கூட்டணி… ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த பாஜக

பாஜக தேசிய தலைமை புறக்கணித்ததால் NDA கூட்டணியிலிருந்து OPS விலகினார். இதனை தொடர்ந்து நெல்லைக்கு சென்ற EPS-யிடம் OPS இணைப்பு குறித்து நயினார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், நாளை தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஸை சந்திக்க வருமாறு OPS-க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
News August 9, 2025
அந்த ஹீரோ டார்ச்சர் செய்தார்.. தமன்னா பகீர் புகார்

ஷூட்டிங்கில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தமன்னா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரம்ப காலத்தில் நடித்த படத்தின் ஹீரோ, தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யாதீர்கள் என கெஞ்சியும் அந்த ஹீரோ கேட்கவில்லை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பதாக கூறிய பிறகே அவர் விலகியதாகவும் கூறியுள்ளார். எந்த ஹீரோவாக இருக்கும்?
News August 9, 2025
தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டது: அன்புமணி

பதவி, பொறுப்புக்கான அவசியமே தனக்கு கிடையாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தான் தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டதாகவும், மனதில் பாரத்தை சுமந்து வருவதாகவும் தெரிவித்தார். தான் சுயநலவாதி கிடையாது, ஆனால் ராமதாஸை சுற்றியுள்ள குள்ளநரி கூட்டம் ஒருதலைபட்சமாக தான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக அவரிடம் கூறுவதாகவும் வேதனை தெரிவித்தார்.