News June 7, 2024
வேலைவாய்ப்பற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற விரும்பும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மதுரை எம்பி சிறப்புரை

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா நிகழ்வில் நேற்று முதல் நாள் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் எழுத்தாளர் அய்கோ தமிழர் வழிபாட்டு மரபு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News August 24, 2025
தூத்துக்குடி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த கலெக்டர்

தூத்துக்குடியில் 6-ம் ஆண்டு புத்தகத்தில் விழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அந்த அரங்கத்தில் தனியாக ஒரு அரங்கு ஏற்பாடு செய்து அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
News August 23, 2025
தூத்துக்குடி: கை ரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <