News June 7, 2024

ஆட்டோவில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்

image

கடையால் சிற்றாற்றின்கரையைச் சேர்ந்தவர் பிபின்(42), முன்னாள் ராணுவ வீரரான இவர் மனைவி, குழந்தையை பிரிந்து வாழ்கிறார். கடந்த சில நாட்களாக இவர் முதப்பன்கோட்டில் உள்ள செல்வராஜ்(66) என்பவரின் ஆட்டோவில் இரவு  தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் ஆட்டோவில் இறந்து கிடந்தார். இதுகுறித்து  செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சாதனை

image

குமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திலீபன் என்பவர் சென்னையில் நடைபெறும் 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டில் நடைபெறும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். மாவட்ட எஸ். பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

களியக்காவிளையில் வாக்காளர் தீவிர திருத்த பணி

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விளவங்கோடு சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன் அவர்கள் இன்று 7-ம் தேதி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியாக்கவிளை பகுதியில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News November 7, 2025

குமரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

குமரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

error: Content is protected !!