News June 7, 2024

குமரி வந்த 2,200 டன் ரேசன் அரிசி

image

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,200 டன் ரேசன் அரிசி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 39 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று(ஜூன் 6) கோட்டார் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. பின்னர் வேகன்களில் இருந்து அரிசி மூடைகளை லாரி களில் தொழிலாளர்கள் ஏற்றினர். லாரிகளில் அரிசி மூடைகள் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

Similar News

News August 14, 2025

குமரி மக்களே இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 14, 2025

குமரி: கணவரால் பிரச்சனையா.? உடனே CALL .!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04652-278404-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 14, 2025

ஆக.18ல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட்.18ம் தேதி காலை 9 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை விண்ணப்பங்களை ஆட்சியரிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!