News June 7, 2024
சென்னை: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்!

சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் அகஸ்டின் பால். இவர் தனது மனைவியின் 25வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதற்காக வீடு முழுவதும் அலங்காரம் செய்ய நேற்று(ஜூன் 6) சீரியல் லைட் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தம்பதிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், மனைவி கண்முன்னே கணவன் உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 14, 2025
சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த அறிவுரை

2025-26 நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகர் சென்னை மாநகராட்சி (GCC) சொத்து உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உரிய நேரத்தில் வரி செலுத்துவதன் மூலம், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு 84(2)-ன் படி விதிக்கப்படும் மாதாந்திர அபராத வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று GCC தெரிவித்துள்ளது
News September 14, 2025
ரிப்பன் மாளிகை அருகே ட்ரோன் மூலம் படம் எடுத்த 3 பேர் கைது

சென்னை ரிப்பன் மாளிகை அருகே அனுமதியின்றி ட்ரோன் கேமரா மூலம் படம் எடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த அம்ஜத் (35), நரேஷ் குமார் (22), முகமது சைப் (22) ஆகிய மூன்று பேரை பெரியமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது. எந்த நோக்கத்திற்காக படம் எடுத்தனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 14, 2025
சென்னையில் அட்ரோஸிட்டி செய்த திருநங்கைகள் கைது

சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி அரும்பாக்கம் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஜெஸ் ஆலன் ரொசாரியா, காசி தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு திரும்பியபோது, அவரை வழிமறித்த இரு திருநங்கைகள் 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று திருநங்கைகளை கைது செய்தனர்.