News June 7, 2024
தமிழக பாஜக தலைவர் மாற்றம்?

2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக பாஜக தலைவராகப் பதவியேற்றார் அண்ணாமலை. பாஜகவின் தேசியக் கொள்கைகளின்படி 3 ஆண்டுகள் மட்டுமே தலைவராக நீடிக்க முடியும். அந்த வகையில், அடுத்த மாதம் அண்ணாமலையின் தலைவர் பதவி நிறைவடையவுள்ளது. மீண்டும் அவர் தலைவராகத் தேர்வு செய்யப்படுவாரா, அல்லது புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது.
Similar News
News August 9, 2025
ராமருக்கு போல் சீதாவுக்கும் பிரமாண்ட கோயில்: அமித்ஷா

பீஹார் மாநிலத்தில் சீதாதேவியின் பிறப்பிடமாக கருதப்படும் சீதாமர்ஹியில் உள்ள புனவ்ராதாம் பகுதியில் ஜானகி மந்திர் கோயில் உள்ளது. சீதாதேவியின் கோயிலாக இது கருதப்படுகிறது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்கப்பட்டது போல், தற்போது இக்கோயிலை ₹882.87 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அமித்ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
News August 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 9 – ஆடி 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
News August 9, 2025
பொளந்துவிட்ட பேட்ஸ்மேன்கள்.. 3 பேர் 150-க்கும் மேல்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் நியூஸி., வீரர்கள் மரண அடி அடிக்கின்றனர். கான்வே 153 ரன்களுக்கு அவுட் ஆக, நிக்கோலஸ் 150, ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக வில் யங் 74, ஜேக்கப் டஃபி 36 ரன்களில் அவுட் ஆகினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசி., அணி 601/3 ரன்களை குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.