News June 7, 2024
திண்டுக்கல் : சேதமடைந்த சுவர்கள் அகற்றம்

திண்டுக்கல் பகுதியில் பெய்த கோடை மழையினால் பல்வேறு இடங்களில் சேதமடைந்த நிலையில் இருந்த கட்டட சுவர்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அண்மையில் கட்டணக் கழிப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவா் காயமடைந்தாா். இதனையடுத்து பேருந்து நிலையத்திலுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து, இடியும் நிலையிலுள்ள சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.
Similar News
News February 9, 2026
திண்டுக்கல்: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 9, 2026
திண்டுக்கல் அருகே அரிவாளுடன் பயங்கர மோதல்!

திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் நேற்று இரு தரப்பினரிடையே நடுரோட்டில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
News February 9, 2026
திண்டுக்கல்: தம்பதி வெட்டிக் கொலை.. கலெக்டர் உத்தரவு!

திண்டுக்கல், யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் மற்றும் அவரது மனைவி ஞானதீபிகா ஆகிய இருவர், கடந்த மாதம் 8-ஆம் தேதி முன்விரோதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 9 பேரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார்.


