News June 7, 2024

தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தென்காசி எம்பி

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி சி ஸ்ரீகுமார் அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர்  கிருஷ்ணசாமி, மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரை விட  2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் அவர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Similar News

News September 14, 2025

தென்காசி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News September 14, 2025

தென்காசியில் 471 வழக்குகளுக்கு தீர்வு

image

தென்காசியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தலைமை வகித்தார்.தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் , முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான பிஸ்மிதா பங்கேற்றனர். 369 நீதிமன்ற வழக்குகளுக்கும், 92 நீதிமன்ற முன் வழக்குகளுக்கும் என மொத்தம் 471 வழக்குகளுக்கு தீர்வு காணபட்டது.

News September 14, 2025

தென்காசி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

image

தென்காசி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தென்காசி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!