News June 7, 2024

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தேர்வு

image

நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் உயர் தொழில் நுட்ப ஆய்வகம், மாணவர்கள் வருகை பதிவேற்றம் (இஎம்ஐஎஸ் ) ஆகிய பணிகளுக்காக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கணினி வழித் தேர்வு இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் ஏழு மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

Similar News

News September 14, 2025

நாமக்கல்: பாலியல் வழக்கில் மேஸ்திரி கைது!

image

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே சோழசிராமணி, மாரப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி மதன்குமார், 21, என்பவர், 15 வயது சிறுமியை கடத்தி, கோவிலில் கட்டாய திருமணம் செய்துள்ளார். ப.வேலுார் போலீசார் சிறுமியை மீட்டு, போக்சோ சட்டத்தில் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 14, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 13, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (செப்.13) நாமக்கல் – (தங்கராஜ் – 9498110895) ,வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன்- 9498169092), திம்மநாயக்கன்பட்டி – (ஞானசேகரன்- 9498169073) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!