News June 7, 2024
தமிழகத்தில் விடிய விடிய மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
Similar News
News September 14, 2025
புகழ் எல்லாம் கொஞ்ச காலம் தான்: சமந்தா

ஒரு நடிகைக்கு, புகழ், ரசிகர் பட்டாளம் என்பது கொஞ்ச காலம் மட்டுமே என சமந்தா தெரிவித்துள்ளார். நடிகையின் வாழ்க்கை நீண்டது அல்ல என்ற அவர், இதை உணர்ந்துகொள்வது தனது வாழ்வில் மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மயோடிசிஸ் நோயிலிருந்து மீண்டு வந்தது, நாக சைதன்யாவுடனான பிரிவு என சில காலம் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வாழ்க்கை முறை குறித்து பேசி வருகிறார்.
News September 14, 2025
BREAKING: நாளை முதல் மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சமூக நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் 3 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகையுடன் குழந்தைகளின் அனைத்து விதமான கல்விச் செலவுகளையும் ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
News September 14, 2025
நாற்காலிகளில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருக்கும் துளைகள் வெறும் டிசைன் கிடையாது. நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது அதற்கிடையில் காற்று புகும். அப்படி அடைபடும் காற்று, வெளியேறாவிட்டால் சேரை பிரித்தெடுப்பது சிரமமாக இருக்கும். இதனாலேயே இந்த துளைகள் போடப்பட்டிருக்கிறது. மேலும், துளைகளை போடுவதால் பிளாஸ்டிக்கின் தேவை குறைந்து, அது உற்பத்தி செலவை குறைக்கிறதாம். SHARE.