News June 7, 2024
எங்கே சென்றார் ஜெயக்குமார்?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார். தென் சென்னையில் 3ஆவது முறை போட்டியிட்ட அவர், 1.72 லட்சம் வாக்குகளுடன் 3ஆவது இடம் பிடித்தார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஜெயக்குமாரை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அடிக்கடி பேட்டி கொடுக்கும் அவரை கடந்த 3 நாள்களாக காண முடிவதில்லை எனக் கூறி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
விசித்திரமான இடங்கள்

உலகில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அவை இயற்கை அற்புதங்களாகவும், மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. சில இடங்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. அவற்றில் சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று வேறு ஏதேனும் விசித்திரமான இடம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
BREAKING: ₹85,000-ஐ தாண்டிய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,500-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹84,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் சவரனுக்கு ₹1,120 உயர்ந்து ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News September 23, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000: இதை செய்தால் கிடைக்கும்

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வரும் <<17775670>>அக். 18-ம் தேதி <<>>₹2,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விவசாயிகள் இதை பெறுவதற்கு e-KYC, நிலப்பதிவுகள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகளை செய்ய வேண்டியது அவசியம். அதேபோல், தங்களது விவசாயி பதிவேட்டையும் புதுப்பிக்க வேண்டும். மேலும், தங்கள் வங்கிக் கணக்கில் நேரடி மானிய விருப்பத்தையும், ஆதார் மற்றும் மொபைல் எண்ணை இணைப்பதும் கட்டாயமாகும்.