News June 7, 2024
T20 WC: அமெரிக்காவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்

T20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 11ஆவது லீக்கில், முதலில் ஆடிய PAK அணி, 159/7 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய USA அணியும் 159/3 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் USA சிறப்பாக செயல்பட்டு PAK அணியை வீழ்த்தியது. இதன்மூலம், குரூப் A பிரிவில் USA அணி முதலிடத்தைப் பிடித்தது. இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.
Similar News
News August 10, 2025
இந்தியாவிற்கு வான்வெளியை மூடியதால் ₹127 கோடி இழப்பு

இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ₹127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை இடைப்பட்ட காலங்களில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது.
News August 10, 2025
விரைவில் இந்தியா – ஓமன் இடையே ஒப்பந்தம்

இந்தியா – ஓமன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இரு நாடுகளும் தங்களது சுங்கவரிகளை குறைக்கும் அல்லது நீக்கும். 2024-25 ஆண்டில் 10 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இரு தரப்பு வர்த்தகம் நடந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள், யூரியா 70% ஓமனில் இருந்து வருபவை.
News August 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 10 – ஆடி 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.