News June 6, 2024
கேசவ விநாயகத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் நிபந்தனை

பாஜக மூத்த தலைவர் கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் மட்டுமே விசாரணைக்கு அழைக்க வேண்டும் என சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைத்தனர். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News September 4, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. வெளியான புது தகவல்

2026 பொங்கல் பண்டிகை சிறப்புத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 ரொக்கம் வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது CM ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News September 4, 2025
சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேனா ஏபி டி?

21-ம் நூற்றாண்டின் சிறந்த ODI பேட்ஸ்மேன்கள் பட்டியலை ஏபி டிவில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், விராட் கோலிக்கு நம்பர் 1 இடத்தை வழங்கிய அவர், சச்சினுக்கு 4-வது இடத்தை கொடுத்துள்ளார். ஆனால், அடுத்த அவர் செய்தது தான் சச்சின் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது. சச்சினை விட தானே சிறந்த பேட்ஸ்மேன் என தனக்கு 2-ம் இடத்தை வழங்கியுள்ளார். மேலும், இந்த பட்டியலில் ரோஹித் 6, தோனி 7-ம் இடத்திலும் உள்ளனர்.
News September 4, 2025
ரத்த நிலவை காண ரெடியாகுங்க!

வரும் 7-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி பயணிப்பதால், செந்நிற ஒளியில் நிலவு பிரகாசிக்கும். இதனால், இதை ‘ரத்த நிலவு’ என வானியலாளர்கள் வர்ணிக்கின்றனர். இரவு 8:58-க்கு தொடங்கும் இந்த கிரகணம், நள்ளிரவு 2:25 வரை நிகழ்ந்தாலும், இரவு 11 முதல் 12:22 மணி வரை ரத்த நிலவு முழுமையாக பிரகாசிக்கும். மொட்டை மாடியில் நின்றும் வெறும் கண்களால் இந்த அரிய நிகழ்வை காணலாம்.