News June 6, 2024
ITI சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து மே 10ஆம் தேதி முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
மோடிக்கு நான் சொல்லித் தரேன்… கிளம்பிய நெதன்யாகு

டிரம்ப்பை எப்படி டீல் செய்வதென்று PM மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். மோடியும் டிரம்ப்பும் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால், இதை செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்தியா வரவுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய- அமெரிக்க உறவு மிகவும் உறுதியானது என்றும், வரிவிதிப்பு விவகாரத்துக்கு இருநாடுகளும் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
News August 8, 2025
விநாயகர் சதுர்த்தி.. இவற்றுக்கெல்லாம் தடை!

விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 27) கொண்டாட்டம் தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, *பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும். *சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த தடை. *ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. *அனுமதியில்லாத இடங்களில் சிலைகளை கரைக்க கூடாது. SHARE IT.
News August 8, 2025
அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் படிக்கணும்: அமித்ஷா

பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து செல்லும் ராகுல் அதனை திறந்து படிக்க வேண்டுமெனவும், அதில் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை என்றும் கூறினார். பீகார் மக்களின் வேலைகளைப் பறிக்கும் வங்கதேசத்தினரைக் காப்பாற்ற ராகுல் விரும்புவதாகவும் விமர்சித்தார்.