News June 6, 2024
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், கடந்த இரண்டரை மாதமாக அமலில் இருந்த விதிமுறைகள் இன்று இரவுடன் விலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சிலமணி நேரம் முன்கூட்டியே தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
உடல் வலி நீங்க காலையில் இந்த யோகா பண்ணுங்க!

அர்த்த பெகாசனம் செய்வதால், உடல் வலி நீங்கி, தசைகள் வலுபெறும்.
➮தரையில் குப்புற படுத்து, கைகளை தரையில் ஊன்றவும்.
➮கைகளில் அழுத்தம் கொடுத்து, மார்பை- தலையை உயர்த்தவும்.
➮வலது முழங்காலை மடித்து, இடுப்பிற்கு அருகில் கொண்டு வரவும்.
➮வலது கையை கொண்டு, வலது முழங்காலை பிடித்து, மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விடவும். ➮இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, காலை மாற்றி செய்யவும். SHARE IT.
News September 14, 2025
மணிப்பூர் இரண்டாக பிரிகிறதா?

மணிப்பூரை பிரித்து குக்கி இன மக்களுக்கு சட்டப்பேரவையுடன் கூடிய தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க கோரி, PM மோடியிடம் 7 BJP MLA-க்கள் உட்பட 10 MLA-க்கள் குழு மனு அளித்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தாங்கள், மீண்டும் ஒருபோதும் அவர்களோடு ஒரே கூரையின் கீழ் வாழ முடியாது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். விரைவில் நற்செய்தி வரும் என PM மோடி உறுதியளித்துள்ளார்.
News September 14, 2025
Sports Roundup: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

*ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 80Kg எடைப்பிரிவில் நுபுர் ஷியோரன் வெள்ளி வென்றார். *உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இஷா சிங் தங்கம் வென்றார். *18 வயதுக்கு உட்பட்ட ஆசிய ரக்பியில் இந்தியா 24-5 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. * இந்தியா Vs ஆஸி. மகளிர் இடையே முதல் ODI இன்று சண்டிகரில் நடைபெறுகிறது.