News June 6, 2024
அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை: அதிமுக

இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என அதிமுக ஐ.டி.விங் பதிலடி கொடுத்துள்ளது. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத அதிமுக, பாஜவுடன் சேர்ந்தால் மட்டும் எப்படி வெற்றிபெறும் என அண்ணாமலை கூறிய நிலையில், ஆடு, ஓநாய், நரி என எது வந்தாலும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது என ஐ.டி.விங் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 23, 2025
மகளிர் உரிமைத் தொகை.. வந்தது ஹேப்பி நியூஸ்

குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான பெண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
திமுக MPக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக MP-க்களின் ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. வாக்குத் திருட்டு புகார் தொடர்பாக போராட்டம் நடத்துவது, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
News September 23, 2025
கண்ணழகால் சுண்டி இழுக்கும் சில்க்கின் Rare Photos!

சில்க் ஸ்மிதா.. தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் கனவுக்கன்னி. அழகு குறிப்புகள் அவருக்கு தேவைப்பட்டதில்லை, ஆனால் அழகு பற்றிய குறிப்பில் அவர் பெயர் என்றைக்கும் நிலைத்திருக்கும். பலரும் பார்த்திராத சில்க் ஸ்மிதாவின் அறிய புகைப்படங்கள் சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளான இன்று உங்களின் வாழ்த்தை Likes-ஆக கொடுக்கவும்.