News June 6, 2024
திருவாரூர்: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
Similar News
News August 23, 2025
திருவாரூர்: ITI போதும் அரசு வேலை!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 23, 2025
திருவாரூர்: சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடம்!

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படும் காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், தியாகராஜர் கோயிலின் இருப்பிடமாக இருப்பதால், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. இதனால் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்கியது.
News August 23, 2025
மாவட்ட அளவில் எய்ட்ஸ் வினாடி வினா போட்டி

திருவாரூர் மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் எய்ட்ஸ் மாவட்ட கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. 26 பள்ளி ரெட்ரிப்பன் கிளப் மாணவர்கள் கலந்து கொண்டதில் திருவாரூர் அரசு உதவி பெறும் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாரா அக்ஷயா அணி முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.