News June 6, 2024
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி?

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுக மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் பாஜக ஆதரவு பேச்சுகளும் இதையே உணர்த்துகின்றன. அதே நேரம், பாஜகவில் அண்ணாமலையின் தலைமையை மாற்ற அதிமுக தரப்பில் கோரிக்கை எழும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 23, 2025
தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

சில்லென்று காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்தநாள். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்தியா சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? வாழ்த்தை Likes-ஆக கொடுங்க.
News September 23, 2025
AI-ஆல் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பா!

AI-ஆல் ஆண்களை விட பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெண்களின் 28% வேலைகளும், ஆண்களின் 21% வேலைகளும் AI-ஆல் செய்யமுடியும். இதற்கு, இத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030-க்குள் 34.3 கோடி பெண்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பாலின பாகுபாடை உடனடியாக சரி செய்ய ஐநா வலியுறுத்தியுள்ளது.
News September 23, 2025
RECIPE: குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம்!

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும் *இளநீரை புளிக்க வைத்து மாவில் சேர்த்து, 6 மணி நேரம் புளிக்க வைக்கவும் *கருப்பட்டியை கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும், வடிகட்டி மாவில் சேர்க்கவும் *இந்த மாவை ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் பஞ்சு போன்றும் சுட்டு எடுத்தால், சுட சுட குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம் ரெடி. SHARE.