News June 6, 2024

அயோத்தி மக்கள் துரோகிகள்: நடிகர் சுனில் லஹேரி

image

ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து, ‘ராமாயணம்’ டிவி தொடரில் லக்‌ஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி அத்தொகுதி மக்களை வசை பாடியுள்ளார். வனவாசம் சென்று வந்த சீதையை சந்தேகப்பட்ட அயோத்தியை சேர்ந்த அதே மக்கள்தான் இவர்கள் எனவும், அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

பள்ளிகளுக்கு 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.10 முதல் 23-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் அடங்கும். மொத்தமாக 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

News December 4, 2025

ஆறுகள் இல்லாத நாடுகள்

image

ஆறுகள் இல்லாமல் நாடுகளா? என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம், பல நாடுகளில் ஆறுகள் என்பதே கிடையாது. பெரும்பாலும் பருவகால ஆறுகள் மட்டுமே உள்ளன. அதாவது, மழைக்காலங்களில் நிரம்பும் ஓடைகள். எந்தெந்த நாடுகளில் நிரந்தரமான ஆறுகள் கிடையாது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 4, 2025

திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்படுமா?

image

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30-க்குள் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 2-வது முறையாக போலீசார் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளிக்கவில்லை. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மலைக்கு செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நீடிக்கிறது.

error: Content is protected !!