News June 6, 2024
ஜூன் 26ல் குறைதீர் முகாம்

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், அஞ்சல்துறை சார்பில் வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர் முகாம் வரும் ஜூன் 26-ம் தேதி, காலை 11 மணிக்கு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை நேரில் கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வார்.
Similar News
News September 4, 2025
திருப்பத்தூர்: Ration Card வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே (1800-425-5901) அழைத்து புகார் அளிக்கலாம். <
News September 4, 2025
திருப்பத்தூர்: 28 சவரன் நகை கொள்ளை

ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் மாணிக்கம் மற்றும் மனைவி சர்மிளா வசித்து வருகின்றனர். சர்மிளா நேற்று (செப்3) தனது வீட்டில் அலமாரியில் வைத்திருந்த தங்க நகையை பார்த்த போது மூன்று மாதங்களுக்கு முன்பு வைத்து இருந்த 28 சவரன் காணவில்லை. இதனால் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News September 4, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (04-09-2025) வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.