News June 6, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News September 23, 2025
காஞ்சி சங்கரமடம் அருகே லாரி மோதி விபத்து!

காஞ்சிபுரம் மாநகரம் சாலை தெரு சங்கரமடம் அருகே உள்ள சாலை திருப்பத்தில் இன்று (செப்.,23) காலை 7.15 மணியளவில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி வேகமாக திரும்பியதில் சைக்கிளில் சங்கரமடத்திற்கு பூக்கள் கொண்டு சென்ற பூக்கடை வியாபாரி பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 23, 2025
நரம்பு மண்டலத்திற்கு வலுசேர்க்கும் மூலிகை தேநீர்!

வாய்ப்புண், வயிற்றுப் புண்களை ஆற்றவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்த வல்லாரை கீரை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➱வல்லாரை கீரை இலைகளை கழுவி, தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும் ➱மிதமான தீயில், 2- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி எடுக்கவும். ➱தேவையென்றால், தேன் சேர்த்தால், சுவையான ஹெல்தியான வல்லாரை கீரை தேநீர் ரெடி. இப்பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க!
News September 23, 2025
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. மிகப்பெரிய தாக்கம்

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ‘எச்-1பி’ விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியதால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ₹88.30-ஐ மீண்டும் தொட்டது. இதன் எதிரொலியாகவும், டாலர்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் மத்திய வங்கிகள் தங்கம் வாங்கி குவித்ததாலும், நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ₹1,120 உயர்ந்துள்ளது.