News June 6, 2024
ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய ஆஸி., அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஹெட், மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 56(50), ஸ்டாய்னிஸ் 67(36) பொறுப்புடன் விளையாடி அரை சதம் விளாசினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஆஸி., அணி 164 ரன்கள் குவித்தது.
Similar News
News March 7, 2026
₹2,500 மகளிர் உரிமைத் தொகை.. விஜய் தேர்தல் வாக்குறுதி

தவெக சார்பில் நடைபெற்றுவரும் மகளிர் தின நிகழ்ச்சியில், பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். அதில், தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித் தொகை ₹2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அரசு ஊழியர்களை தவிர மற்ற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் விஜய் உறுதி அளித்துள்ளார்.
News March 7, 2026
FLASH: தங்கம் விலை சரசரவென குறைந்தது

<<19317958>>தங்கம் விலை<<>> 6 நாள்களுக்கு பின், இன்று அதிகரித்துள்ளது. ஆனாலும், இந்த வார வர்த்தகம் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியாகவே அமைந்திருக்கிறது. போர்ச் சூழலுக்கு நடுவிலும் 22 கேரட் தங்கம் ₹5,800 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ₹1,26,200-க்கு விற்பனையான 1 சவரன் தங்கம், தற்போது ₹1,20,400-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கிலோவுக்கு ₹35,000 சரிந்து ₹2.90 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
News March 7, 2026
கோடை காலத்திற்கு ஏற்ற கலர் எது தெரியுமா?

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கோடைக்காலத்தில் குறைந்த வெப்பத்தை உறிஞ்சும் நிறங்களில் ஆடைகள் அணிந்தால், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். வெள்ளை, வெளிர் நீலம், வெளிர் சாம்பல், மென்மையான இளஞ்சிவப்பு, வெளிர் பச்சை, லாவெண்டர், பவுடர் நீலம், கிரீம் போன்ற வண்ணங்களில் ஆடைகளை அணியலாம். கருப்பு நிறம் அதிகளவில் வெயிலை உறிஞ்சும் என்பதால் இதை தவிர்ப்பது நல்லது.


