News June 6, 2024
ஜூன் 21 முதல் OTT-இல் ‘அரண்மனை 4’

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகம் முழுவதும் ₹100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ் நடித்த இப்படத்துக்கு, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
Similar News
News March 24, 2026
கோவை: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

கோவை மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News March 24, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

ஆபரணத் தங்கம் விலை <<19461962>>சவரனுக்கு ₹2,720<<>> குறைந்த நிலையில், வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹240-க்கும், கிலோ வெள்ளி ₹2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை நேர வர்த்தகத்தில் கிலோவுக்கு ₹15,000 குறைந்து ₹2,35,000-க்கு விற்பனையானது. பின்னர், இரவில் ₹15,000 அதிகரித்த நிலையில், மீண்டும் ₹10,000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
News March 24, 2026
மக்களை காக்க PM முதலில் தயாரா? CM ஸ்டாலின்

மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து மக்களை காக்க பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என CM ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் PM மோடி பேசியதை விமர்சித்த அவர், மக்களை காக்க நீங்கள் முதலில் தயாரா என கேட்டுள்ளார். மேலும், தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


