News June 6, 2024

திருவள்ளூர்: காவடி எடுத்து வரும் பக்தர்கள்

image

திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று வைகாசி கிருத்திகை முருகனுக்கு விசேஷ தினம் என்பதால் வேண்டுதல் வைத்திருந்த பொதுமக்கள் முருகனுக்கு காவடிகள் எடுத்து மற்றும் அழகு குத்தி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மூலவருக்கு கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

Similar News

News July 8, 2025

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை

image

2025 2026 ஆம் ஆண்டு நலிந்த நிலையில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் வரவேற்கப்படுகின்றன. ஜூலை 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில்7401703482 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News July 8, 2025

மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்க அழைப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் 20.10.2016 க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரைமுறை செய்து கொடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அறிக்கை மூலமாக தெரிவித்தார். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

News July 8, 2025

முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முன்னாள் படைவீரர்/சார்ந்தோர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக குறைபாடுகள்/சிரமங்கள் SPARSH இணையதளத்தில் ஏதேனும் இருப்பின் அதனை களைந்திடும் பொருட்டு கண்ட்ரோலர் ஒப்பி டேபின்ஸ் அக்கௌன்த்ஸ் தேனாம்பேட்டை திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் ஜூலை 9,10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!